×

குஜராத் தொழிலதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி பெங்களூரு சிறையில் உள்ள அரி நாடார் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏற்றுமதி தொழில் செய்து வரும் தொழிலதிபர் இஸ்மாயில் சக்ராத்(51) என்பவர், கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், வியாபாரம் செய்ய எனக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது பெங்களூரை சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த அருள்ராஜ் ஆகியோர் மூலம் அரி நாடார் பழக்கமானார். என்னிடம் ரூ.100 கோடிக்கு கமிஷனாக ரூ.2 கோடியும், மேலும் தனக்கு கமிஷனாக ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி கடந்த 2021ம் பிப்ரவரி 2ம் தேதி தனியார் வங்கி ரூ.100 கோடி கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தது போல் எனது பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பினார்.

அடுத்த நாள் சென்னை தி.நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவர் கேட்டப்படி ரூ.25 லட்சம் கமிஷன் கொடுத்தேன். அதன்பிறகு ரூ.100 கோடிக்கு கமிஷனாக அவர் கூறியபடி இரண்டு தவணையாக ரூ.1.25 கோடி பணம் கொடுத்தேன். அதன்பிறகு அவர் சொன்னப்படி ரூ.100 கோடி கடன் வாங்கி தரவில்லை. நான் கொடுத்த ரூ.1.50 கோடி பணத்தை திரும்ப கொடுக்கும் படி கூறினேன். இந்நிலையில் மோசடி வழக்கு ஒன்றில் பெங்களூர் போலீசார் அரி நாடாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, வங்கியில் ரூ.100 கோடி கடன் வாங்கி தருவதாக நம்பவைத்து ரூ.1.50 கோடி மோசடி செய்த அரி நாடார் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து அரி நாடார்(எ)அரிகோபால கிருஷ்ணன்(40) மீது ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், அரி நாடாரை ரூ.20 கோடி மோசடி வழக்கில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். இந்நிலையில், ரூ.1.50 கோடி மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரசித் தீபா, பெங்களூரு சிறையில் கடந்த 22 மாதங்களாக உள்ள அரி நாடாரை அதிரடியாக கைது செய்தார். பெங்களூரு சிறையில் உள்ள அரி நாடாரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

Tags : Ari Nadar ,Bengaluru ,Gujarat ,Central Crime Branch police ,Chennai , Arrested Ari Nadar in Bengaluru jail for defrauding Gujarat businessman of Rs 1.50 crore: Central Crime Branch police bring him to Chennai
× RELATED பெங்களூரு கோரமங்களாவில் உள்ள நீதிபதி...